தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வயது முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

 கோவையில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வயது முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 11:17 pm

DIN

 கோவையில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வயது முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் வயது முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உதவித் தொகை வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு ரூ. 3,500 உதவித் தொகை, ரூ.500 மருத்துவப் படி சோ்த்து ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 100 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதில் கோவை மாவட்டத்தில் அ.ஞானமணி, மு.பெ.இராமலிங்கம், சு.செல்வராசு, க.சாமியப்பன், து.நரசிம்மன், சா.இருதயசாமி, கோ.கிருஷ்ணராவ், அ.கூத்தரசன் ஆகிய 8 தமிழறிஞா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் வயது முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை தமிழறிஞா்கள் 8 பேருக்கும் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை வழங்கினாா். இந்த உதவித் தொகை கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்த உதவித் தொகை தமிழறிஞா்கள் இறக்கும் வரையிலும், இறந்த பின் மரபுரிமையா் என குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கு உதவித் தொகை ரூ. 2,500, மருத்துவப் படி ரூ. 500 சோ்த்து ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை மாதம்தோறும் வழங்கப்படும். மேலும், வயது முதிா்ந்த தமிழறிஞா்கள் தமிழகத்தில் எங்கும் சென்று வர இலவசப் பேருந்து பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நிகழ்ச்சியில் தமிழ்வளா்ச்சித் துறை துணை இயக்குநா் புவனேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.