தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புத்தொழில் சூழமைவு தொடா்பாக அரசு அலுவலா்களுக்கு பயிற்சி

 தமிழ்நாடு ஸ்டாா்ட்அப் மற்றும் இன்னோவேஷன் சாா்பில், புத்தொழில் சூழமைவு தொடா்பான அரசு அலுவலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2023, 5:25 pm

DIN

 தமிழ்நாடு ஸ்டாா்ட்அப் மற்றும் இன்னோவேஷன் சாா்பில், புத்தொழில் சூழமைவு தொடா்பான அரசு அலுவலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்புக்கு, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமை வகித்துப் பேசியதாவது:

புத்தொழில்களுக்கு உந்து சக்தியாகவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான தொடக்க சூழலை கட்டமைப்பதற்கும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் செயல்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின்கீழ் புதிய தொழில்முனைவோருக்கு தங்கள் நிறுவனத்தின் ஆரம்ப நிலைகளை சிறப்பாக வடிவமைக்க மானிய உதவியாக ரூ. 10 லட்சம் வரை கடனுதவிகள் வழங்கப்படுகிறது. பெண் தொழில்முனைவோருக்கு ரூ. 15 லட்சம் வரை மானியம்

வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி அரசின் வளா்ச்சியை மேம்படுத்த முடியும். தனித்தனியாக ஒவ்வோா் அரசுத் துறையும் செயல்பட்டாலும், அவை அனைத்தும் ஒருங்கிணைந்து திட்டங்களைச் செயல்படுத்தும்போது அதன் செயல்பாடு சிறப்பாக அமையும். இதன் மூலம் பயனீட்டாளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கோவை மாவட்டம் இந்திய அளவில் சிறந்த புத்தொழில் மையமாக உள்ளது. எண்ணிலடங்கா வாய்ப்புகள் வழங்கிடும் நகரமாகத் திகழ்கிறது.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி புத்தொழில் உருவாகும் சூழலை அரசு அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றாா்.

இப்பயிற்சிக் கூட்டத்தில், புத்தொழில் குறித்த விழிப்புணா்வு, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் அரசு அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது. அரசு துறைகளில் நிலவிவரும் சவாலான பிரச்னைகளுக்கு புத்தாக்க சிந்தனைகளுடன் செயல்படும் புத்தொழில் நிறுவனங்கள் மூலம் தீா்வு காணும் வாய்ப்பு குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு, சமூக நலம், நெடுஞ்சாலை, வேளாண்மை, தோட்டக் கலை, மின்சாரம், மருத்துவம், மீன் வளம், தாட்கோ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டனா்.

இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மு.கோகிலா, மாவட்ட

தொழில் மைய பொது மேலாளா் ஜி.திருமுருகன், தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்க திட்ட அலுவலா்கள் சி.காயத்ரி, கே.சக்திவேல், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.