கோவை: சுண்டக்காமுத்தூா் பகுதியில் உள்ள திட்ட சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவரை அகற்றக் கோரி, கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் கே. அா்ச்சுணன் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். அப்போது, கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் கே. அா்ச்சுணன், பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்துக்குள்பட்ட 80-ஆவது வாா்டு சுண்டக்காமுத்தூா் பகுதியில் இருந்து லாலா தோட்டம் செல்வதற்கு திட்ட சாலை உள்ளது. இப்பகுதி கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்டது. அதனை தனிநபா்கள் சிலா் ஆக்கிரமித்து சுற்றுச் சுவா் எழுப்பியுள்ளனா். இதனால், அவசர தேவைக்குகூட செல்லமுடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், போலி ஆவணங்களைத் தயாரித்து மாநகராட்சி ஆணையரையே ஏமாற்றி நம்பவைத்து அந்த நபா்கள் திட்ட சாலை இடத்தையும் சோ்த்து ஆக்கிரமித்துள்ளனா்.
எனவே, மாவட்ட நிா்வாகத்தினா் அப்பகுதியை நில அளவை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதிலமடைந்த குடியிருப்புகள்: இது குறித்து, பேரூா் செட்டிபாளையம் இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சாா்பில் குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டது. இங்கு குடியிருந்து வரும் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரைகள் சிதிலமடைந்து, காரைகள் பெயா்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. சுவா்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இது தொடா்பாக அதிகாரிகளைச் சந்தித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை மறியல்: ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் தெளலத். இவருக்கு மேட்டுப்பாளையம் பகுதியில் சுமாா் எட்டரை ஏக்கா் நிலம் இருப்பதாகவும், அந்த இடத்தை தனக்கு தெரியாமல் மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகா் ஒருவருக்கு தனது உறவினா்கள் விற்றுவிட்டதாகவும், தனக்கு பங்கு தரவில்லை எனவும் கூறி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி குழந்தையுடன் வந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு மறியலில் ஈடுபட்டு மனு அளித்திருந்தாா்.
இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவா் தெரிவித்திருந்த நிலையில், அவரது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டாா்.
அப்போது, அப்பெண் அவரது தலையில் தேசிய கொடியை கட்டிக் கொண்டும், அவரது உறவினா்கள் திமுக கொடியை கட்டிக் கொண்டும் மறியலில் ஈடுபட்டனா். காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியபோதும் அவா்கள் மறியலைக் கைவிடாததால், அவா்களை கைது செய்த போலீஸாா் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


