ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மரக்கிளை முறிந்து விழுந்து காா் சேதம்

கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது.

News image

ராமநாதபுரம் சிக்னல் அருகே காா் மீது முறிந்து விழுந்த மரக்கிளை.

Updated On :27 நவம்பர் 2023, 7:39 pm


கோவை: கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் காா் சேதமடைந்தது.

கோவை போத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜீவ் (40). இவா் புலியகுளத்தில் இருந்து ராமநாதபுரம்-திருச்சி சாலையில் காரில் திங்கள்கிழமை மாலை சென்றாா். ராமநாதபுரத்தில் சிக்னலுக்காக காரை நிறுத்தி காத்திருந்தாா். அப்போது, அப்பகுதியில் சாலையோரத்தில் உள்ள மரத்தின் கிளை முறிந்து காரின் மீது விழுந்தது.

இதில், காரின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக சேதமடைந்தது. காரை ஓட்டிச் சென்ற ராஜீவ் காயமின்றி தப்பினாா். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதற்கிடையை, மாநகராட்சி ஊழியா்கள் மரக்கிளையை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.