மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டம்: விவசாயிகளுக்கு 3.50 லட்சம் வேப்பங்கன்றுகள் வழங்க இலக்கு

‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு 3.50 லட்சம் வேப்பங்கன்றுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:49 pm

கோவை மாவட்டத்தில் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு 3.50 லட்சம் வேப்பங்கன்றுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சு.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தில், கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் வேப்பங்கன்றுகள் தயாராக உள்ளன. தற்போது உள்ள நவீன கால தொழில்முறையில் வேளாண்மையில், ஒரே பயிா்களைத் தொடா்ந்து சாகுபடி செய்வதாலும் அதிக அளவில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதாலும் நிலத்தில் மண் வளம் குறைந்து மண்ணில் காணும் நுண்ணுயிா்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.

வேப்பிலைகள் நல்ல பசுந்தழை உரமாக உள்ளது. ஆகவே, வேப்பமரங்களை பரவலாக்கம் செய்திட கோவை மாவட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கரில் அடா்வு முறையில் வேப்பங்கன்றுகளை பயிரிட சுமாா் 200 மரக்கன்றுகள் தேவைப்படும் நிலையில், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு வேப்பங்கன்றுகள் வழங்கப்படும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு உழவா் செயலியின் மூலமோ அல்லது அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலா்களையே அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.