கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கொச்சுவேலி - ஷாலிமாா் சிறப்பு ரயில் நீட்டிப்பு

கொச்சுவேலி - ஷாலிமாா் சிறப்பு ரயில் செப்டம்பா் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 7:28 pm

Din

கோவை: கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் ஷாலிமாருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், செப்டம்பா் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பா் 13-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் கொச்சுவேலி - ஷாலிமாா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06081) ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1.40 மணிக்கு ஷாலிமாா் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பா் 16 வரை திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் ஷாலிமாா் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06082) புதன்கிழமைகளில் காலை 9.55 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயில் கொல்லம், காயன்குளம், செங்கன்னூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, புவனேசுவரம், கட்டாக், காரக்பூா், சந்ராகாட்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.