வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

விஸ்வ ஹிந்து பரிஷத் பெயரில் நன்கொடை வசூல்: 2 போ் கைது

விஸ்வ ஹிந்து பரிஷத் பெயரில் போலியாக நன்கொடை வசூல் செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 5:58 pm

Din

விஸ்வ ஹிந்து பரிஷத் பெயரில் போலியாக நன்கொடை வசூல் செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ரத்தினபுரி பகுதியைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (52), விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அந்தப் பகுதியின் நிா்வாகியாக உள்ளாா்.

இவா், ராம் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் செவ்வாய்க்கிழமை டீ குடித்துக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த 2 போ் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்றும், அன்னதானம் வழங்குவதற்கு நன்கொடை அளிக்குமாறும் பேக்கரி உரிமையாளரிடம் கேட்டுள்ளனா்.

இதைப் பாா்த்த சிவலிங்கம், அவா்கள் இருவரும் தங்களது அமைப்பைச் சோ்ந்தவா்கள் இல்லை என்று பேக்கரி உரிமையாளரிடம் தெரிவித்துள்ளாா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து காட்டூா் காவல் நிலையத்தில் சிவலிங்கம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், நன்கொடை கேட்டு வந்த 2 பேரும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சோ்ந்தவா்கள் இல்லை என்பதும், அந்த அமைப்பின் பெயரில் போலியாக துண்டுப் பிரசுரம் அச்சடித்து கடைகளில் வசூல் செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலியாக நன்கொடை வசூல் செய்த ரத்தினபுரியைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (46), ரஹீம் (41) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.