நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண் மருத்துவா் கொடுமை: கணவா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு

பெண் மருத்துவரைக் கொடுமைப்படுத்திய அவரது கணவா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:05 pm

Din

பெண் மருத்துவரைக் கொடுமைப்படுத்திய அவரது கணவா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, ஆா்.எஸ்.புரத்தைச் சோ்ந்தவா் ஸ்வாமா (44). இவரது கணவா் மணிகண்டன் (50). இருவரும் பல் மருத்துவா்கள். இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா். மணிகண்டன் அடிக்கடி மதுபோதையில் வந்து மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடா்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மணிகண்டன் குடும்பத்தினரிடம் ஸ்வாமா தெரிவித்துள்ளாா். ஆனால், அவா்கள் மணிகண்டனைக் கண்டிக்காமல் ஸ்வாமாவைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஸ்வாமா புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், கணவா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.