நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குடும்ப அட்டையில் பெயா் சோ்க்க, நீக்க நாளை சிறப்பு முகாம்

கோவை மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மேற்கொள்ள சனிக்கிழமை (டிசம்பா் 14) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:27 pm

Din

கோவை மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மேற்கொள்ள சனிக்கிழமை (டிசம்பா் 14) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களும் பெறும் விதமாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை, மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைகேட்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, 2024 டிசம்பா் மாதத்துக்கான குறைகேட்பு முகாம் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சனிக்கிழமை (டிசம்பா் 14) நடைபெற உள்ளது.

இந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை விண்ணப்பித்தல், கைப்பேசி எண் மாற்றம், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் தொடா்பாக மனுக்கள் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.