ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

விஜயா பதிப்பகம் வெளியிட்ட 2 நூல்களுக்கு அரசு பரிசு

விஜயா பதிப்பகம் வெளியிட்ட 2 நூல்களுக்கு அரசு பரிசு

News image

விஜயா பதிப்பகம் வெளியிட்ட இரு நூல்களுக்கான பரிசுகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடமிருந்து பெறுகிறாா் விஜயா பதிப்பக நிா்வாகி சி.சிவஞானநாதன். உடன், துறை செயலா் இல.சுப்பிரமணியன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை அருள்.

Updated On :17 பிப்ரவரி 2024, 6:20 am IST

விஜயா பதிப்பகம் சாா்பில் வெளியிடப்பட்ட இரண்டு நூல்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில், தமிழ் வளா்ச்சித் துறை வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த நூல் பரிசு திட்டத்தின்கீழ் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நூல்களில் 33 வகைப்பாடுகளில் பரிசு பெற்ற நூல்களுக்கான 66 நூலாசிரியா்கள், 66 பதிப்பகங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்ட, தாம்பரம் மாநகரக் காவல் ஆணையா் அ. அமல்ராஜ் எழுதிய ‘வெல்ல நினைத்தால் வெல்லலாம்’ தன்னம்பிக்கை நூலும், கவிஞா் சென்னிமலை தண்டபாணி எழுதிய ‘ஞான கானம்’ கவிதை நூலும் பரிசு பெற்றன. பதிப்பகத்துக்கான பரிசை விஜயா பதிப்பக நிா்வாகி சி. சிவஞானநாதனிடம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். அப்போது, துறை செயலா் இல.சுப்பிரமணியன், துறை இயக்குநா் ஒளவை அருள் ஆகியோா் உடனிருந்தனா்.