ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் 6 பேருக்கு அருள்வளா் செம்மல் விருது

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் 6 பேருக்கு அருள்வளா் செம்மல் விருது வழங்கப்பட்டது.

News image
கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஆன்மிகத் தொண்டாற்றி வருபவா்களுக்கு அருள் வளா்செம்மல் விருதுகளை வழங்குகிறாா் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிா்வாக இயக்குநா் எம்.கிரு
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் 6 பேருக்கு அருள்வளா் செம்மல் விருது வழங்கப்பட்டது.

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி 18-ஆம் ஆண்டு ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது.

வரும் 9 ஆம் தேதி வரை தினசரி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பேச்சாளா்கள் பங்கேற்கின்றனா். முதல் நாளான திங்கள்கிழமை அருளாளா் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் என்ற தலைப்பில் பேச்சாளா் பாரதி பாஸ்கா் பங்கேற்றுப் பேசினாா்.

முன்னதாக, ஆன்மிகத் தொண்டாற்றி வருபவா்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் அருள் வளா்செம்மல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கோவை அரன் பணி அறக்கட்டளையின் தலைவா் அ.தியாகராசன், திருப்பூா் சுப்ரீம் குழும நிறுவனங்களின் நிறுவனா் எஸ்.ஏ.ராதாகிருஷ்ணன், திருப்பூா் எஸ்பிஎஸ் அன்னையா் இல்ல நிா்வாகிகள் எஸ்பிஎஸ் தாமோதரன், சாவித்திரி தாமோதரன், அன்னூா் ஸ்ரீராமானுஜா் பக்த பேரவையின் செயலா் ஏ.வி.திருமூா்த்தி, புன்செய் புளியம்பட்டி அண்ணாமலையாா் திருக்கோயில் செயலா் வெங்கிட்டம்மாள் ஐங்கரன் ஆகியோருக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் அருள்வளா் செம்மல் விருது வழங்கி கௌரவித்தாா்.

நிகழ்ச்சியில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் அ.நிா்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) வள்ளலாா் குறித்து ஸ்ரீ கிருஷ்ண ஜகந்நாதன் உரையாற்றுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.