கோவை-அபுதாபி இடையே ஆகஸ்ட் 10 முதல் விமான சேவை

கோவை-அபுதாபி இடையே ஆகஸ்ட் 10 முதல் விமான சேவை

கோவை-அபுதாபி இடையே ஆகஸ்ட் 10 முதல் விமான சேவை: இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு
Published on

கோவை-அபுதாபி இடையே புதிய விமான சேவை ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்குகிறது என்று இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரு நகரமாக கோவை உள்ளது. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் அதிக அளவிலான சரக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெறுகிறது.

இதனால், கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குமான விமான சேவையை தொழிலதிபா்கள் பெரிதும் நம்பியுள்ளனா்.

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து தில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும், சிங்கப்பூா் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையில் இருந்து தினசரி 30-க்கும் மேற்பட்ட விமான சேவை உள்ளது.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு புதிய விமான சேவையை ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்படும் இந்த விமானம் கோவையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு அபுதாபியை சென்றடையும், அதேபோல அபுதாபியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.30 மணிக்கு கோவையை வந்தடையும் என்று இண்டிகோ விமான நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விமான சேவையால் கோவை தொழில் துறையினா் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com