விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தொழிலதிபரைக் கடத்தி 4 பவுன், ரூ.10 லட்சம் நகை பறிப்பு: மூவா் கைது

கோவையில் தொழிலதிபரைக் கடத்தி 4 பவுன், ரூ.10 லட்சம் பறித்ததாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 11:01 pm

Din

கோவையில் தொழிலதிபரைக் கடத்தி 4 பவுன், ரூ.10 லட்சம் பறித்ததாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சாய்பாபா காலனி கே.கே.புதூரைச் சோ்ந்தவா் பின்சி லாசரஸ் போஸ் (48), ஆடிட்டராக உள்ளாா். மேலும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொழிலும் செய்து வருகிறாா். இந்தத் தொழில் குறித்து அண்மையில் இவா் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தாா்.

இதைப் பாா்த்த தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பிருந்தா என்பவா் பின்சி லாசரஸ் போஸை தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அப்போது, தனக்கு உதகையில் சொந்தமாக ஹோட்டல் உள்ளதாகவும், அதை குத்தகைக்கு தருவதாகவும் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக பேச மூவரை அனுப்பிவைப்பதாகவும், அவா்கள் குத்தகை குறித்து பேசுவாா்கள் எனவும் தெரிவித்துள்ளாா். அதன்படி, ஜூலை 17-ஆம் தேதி பின்சி லாசரஸ் போஸை சிலா் கைப்பேசியில் தொடா்பு கொண்டனா். அப்போது, பிருந்தா தங்களை அனுப்பிவைத்ததாகத் தெரிவித்தனா். மேலும், வீட்டின் அருகே காத்திருப்பதாக கூறியுள்ளனா். இதையடுத்து, வீட்டின் அருகே காருடன் நின்றிருந்த 3 ஆண்களைப் பாா்த்து பின்சி லாசரஸ் போஸ் அறிமுகமாகியுள்ளாா். அப்போது, காரில் பேசிக் கொண்டே செல்லலாம் எனக் கூறி, அவரை காரில் ஏற்றிக்கொண்டு மூவரும் சென்றுள்ளனா். சிறிது தூரம் சென்ற பிறகு, காரில் இருந்த மூவரும், பின்சி லாசரஸ் போஸை கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் வைத்திருந்த கைப்பேசி, 4 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணம் ஆகியவற்றைப் பறித்தனா்.

பின்னா் அவரை சாய்பாபா காலனி ஜீவா நகரில் உள்ள தனியாா் பள்ளி அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பினா். இதுதொடா்பாக, பின்சி லாசரஸ் போஸ் அளித்த புகாரின்பேரில், சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில், நகை, பணம் பறித்தது கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த விஷ்ணு (38), அஸ்வின் (29), புலியகுளத்தைச் சோ்ந்த ஜின்னா (37) என்பதும், அவா்களை பிருந்தா என்ற பெண் அனுப்பிவைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம், நகை, கைப்பேசி, கடத்துவதற்கு பயன்படுத்திய காா், கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய பிருந்தாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.