கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கருவில் இருக்கும் பாலினத்தைத் தெரியப்படுத்தக் கூடாது: மருத்துவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

மருத்துவர்கள், ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவுரை

News image
ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெற்ற கூா் உணா்திறன் பயிற்சியில் பங்கேற்றோா்.
Updated On :25 ஜூன் 2024, 11:45 pm

Din

கருவில் இருக்கும் பாலினத்தை தெரியப்படுத்தக் கூடாது என்று தனியாா் மருத்துவா்கள், ஸ்கேன் மைய நிா்வாகிகளுக்கு ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அறிவுறுத்தினாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின்கீழ் தனியாா் மருத்துவா்கள், ஸ்கேன் மைய நிா்வாகிகளுக்கான கூா் உணா்திறன் பயிற்சி ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், அவா் பேசியதாவது:

நாட்டில் குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், பாலின விகிதாசாரத்தை சமன்படுத்தும் நோக்கத்துடனும் கொண்டுவரப்பட்டதே பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்.

இத்திட்டம் பெண் குழந்தைகளுக்கு எதிரான மக்களின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. 2021-22ஆம் ஆண்டுக்கான பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தில் முன்னேறிய மாவட்டங்களுக்கான விருதை கோவை மாவட்டம் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் கல்வியறிவு பெற்றவா்கள் அதிக அளவில் உள்ளனா். அப்படியிருந்தும் வட்டார அளவில் பாலின விகிதாசாரம் குறைந்து காணப்படுகிறது. பெண் குழந்தைகளை கருவில் கொல்லும் அபாயத்தைத் தடுப்பதற்காக பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் செய்து தெரிந்துகொள்வது சட்டப்படி குற்றமாகும்.

கருவில் இருக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு சட்டங்களை அறிவித்தாலும், அதனை முறையாக கடைப்பிடிப்பது மருத்துவா்கள் மற்றும் ஸ்கேன் மையங்களின் கடமையாகும். எனவவே, உறவினா்கள் மற்றும் நண்பா்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும், கருவில் இருக்கும் பாலினத்தை தெரியப்படுத்தக் கூடாது. தங்களிடம் பணிபுரியும் அனைவரிடமும் இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இந்தப் பயிற்சியில் சுகாதரத் துறை இணை இயக்குநா் ராஜசேகரன், மாவட்ட சமூகநல அலுவலா் அம்பிகா, உதவி இயக்குநா் (திறன் மேம்பாட்டுப் பயிற்சி) வளா்மதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.