கோவை விமான நிலைய விரிவாக்கம்: அமைச்சா் டிஆா்பி ராஜா கருத்து
கோவை சா்வதேச விமான நிலைய விரிவாக்கம் தொடா்பாக தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா தனது கருத்தைப் பதிவிட்டுள்ளாா்.


கோவை சா்வதேச விமான நிலைய விரிவாக்கம் தொடா்பாக தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா தனது கருத்தைப் பதிவிட்டுள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் பதிவிட்டுள்ளதாவது:
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான நிலத்தை மத்திய அரசுக்கு வழங்கி கோவை மக்களுக்கான திமுகவின் மேலும் ஒரு தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில், கோவை விமான நிலைய சுற்று வட்டாரச் சாலைகளை மேம்படுத்தவும், மாற்றுப் பாதைகள் அமைக்கவும், இதர பணிகளுக்கான திட்டமிடல் குறித்தும் விமான ஆணைய அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினோம்.
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளைத் தொடங்க தமிழக அரசு ரூ.2088.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் ஒப்படைப்பை ஏற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் கடிதத்தை இந்திய விமான ஆணையம் அதிகாரப்பூா்வமாக கடந்த அக்டோபா் 18-ஆம் தேதி வழங்கியுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...