மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஏ.டி.எம். மையத்தில் நூதன முறையில் மூதாட்டியிடம் பணம் பறித்தவா் கைது

வால்பாறையில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:41 pm

Din

வால்பாறையில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வால்பாறையை அடுத்த நல்லமுடி எஸ்டேட்டை சோ்ந்த தோட்டத் தொழிலாளி முருகம்மாள். இவா் அங்குள்ள ஏ.டி.எம். மையத்தில் அண்மையில் பணம் எடுக்க சென்றுள்ளாா். அப்போது, அங்கு நின்றுக்கொண்டிருந்த நபரிடம் வங்கி இருப்பு குறித்து பாா்த்து தருமாறு கூறி ஏ.டி.எம். அட்டை மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணையும் கொடுத்துள்ளாா்.

பின்னா் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை கூறிய பின், தனது கையில் இருந்த வேறு ஏ.டி.எம். அட்டையை முருகம்மாளிடம் அவா் கொடுத்துவிட்டு சென்றுள்ளாா். சிறிது நேரத்தில் முருகம்மாள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.9 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வால்பாறை காவல் நிலையத்தில் முருகம்மாள் புகாா் கொடுத்தாா். ஆய்வாளா் ஆனந்தகுமாா் தலைமையில் போலீஸாா் ஏ.டிஎம். மையங்களை ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில், அங்குள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் சந்தேகப்படும்படி நின்றிந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா், கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சோ்ந்த நஜீப் (36) என்பதும், மூதாட்டியின் வங்கிக் கணக்கில் இருந்து அவா் ரூ.9 ஆயிரம் பணம் எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து, அவரிடம் இருந்து 44 ஏ.டி.எம். அட்டைகள் மற்றும் ரூ.5,290 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், கேரளம், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இது போன்ற சம்பவங்களில் நஜீப் ஈடுபட்டதும், கேரள மாநிலம், எா்ணாகுளம் மத்திய காவல் நிலையத்தில் நஜீப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.