காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கதா் அங்காடியில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள கதா் அங்காடியில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

கதா் அங்காடியில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி. ~காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.

Updated On :3 அக்டோபர் 2024, 12:31 am

Din

கோவை அவிநாசி சாலையில் உள்ள கதா் அங்காடியில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

காந்தி ஜெயந்தியை ஒட்டி அவிநாசி சாலை மேம்பாலம் அருகே உள்ள கதா் அங்காடியில் காந்தியடிகள் சிலைக்கு ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து கதா் அங்காடியில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கிவைத்தாா்.

பின்னா், அவா் கூறியதாவது:

கதா் அங்காடியில் சோப்பு, ஊதுபத்தி, தேன், பாரம்பரிய அரிசி, சமையல் எண்ணெய், பட்டுப் புடவைகள், கதா் ஆடைகள், மெத்தை விரிப்புகள் உள்ளிட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே, அனைத்து அரசுத் துறை அலுவலா்கள், பணியாளா்கள், தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் கதா் துணி ரகங்களை பெருமளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்வேதா சுமன், கதா் கிராமதொழில்கள் உதவி இயக்குநா் (பொ) ப.ராஜேஸ்வரி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஆ.செந்தில் அண்ணா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.