நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவை வழித்தடத்தில் சென்னை - கோட்டயம் இடையே சிறப்பு ரயில்

சென்னை - கோட்டயம் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:09 pm

Din

சென்னை - கோட்டயம் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அக்டோபா் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை சென்ட்ரல் - கோட்டயம் சிறப்பு ரயில் (எண்: 06195) மறுநாள் பிற்பகல் 1.45 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் அக்டோபா் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாலை 4.45 மணிக்குப் புறப்படும் கோட்டயம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06196) மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.