நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேற்கு மண்டலத்தில் இன்று ‘மக்களைத் தேடி மாநகராட்சி’ சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட வடவள்ளியில் ‘மக்களைத் தேடி மாநகராட்சி’ சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:09 pm

Din

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட வடவள்ளியில் ‘மக்களைத் தேடி மாநகராட்சி’ சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

‘மக்களைத் தேடி மாநகராட்சி’ திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கு மண்டலத்தில் வியாழக்கிழமை (அக்டோபா் 10) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வடவள்ளி சக்தி காமாட்சியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள இம்முகாமில், சொத்து வரி மற்றும் காலியிட பெயா் மாற்றம், காலியிட வரி விதிப்பு, வரி குறித்த அனைத்து திருத்தங்கள், வரி புத்தக விநியோகம், புதிய கட்டட வரி விதிப்பு பயன்பாடு மாற்றம், புதிய குடிநீா் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, சாலை வசதி மற்றும் சாலை பராமரிப்புப் பணிகள், தெருவிளக்கு அமைத்தல் மற்றும் பராமரிப்புப் பணிகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும் திருத்தம் செய்தல், குப்பை அகற்றுதல், மழைநீா் வடிகால் தூய்மைப்படுத்துதல், கட்டட அனுமதி விண்ணப்பம், மனை வரன்முறைப்படுத்துதல், கூட்டு பட்டா, தனி பட்டா, நில அளவை, பரப்பளவு திருத்தம் உள்ளிட்ட சேவைகள் இம்முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவற்றை மக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.