ஆராய்ச்சி மாணவா் புகாா் விவகாரம்: துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு
கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் மீது ஆராய்ச்சி மாணவா் குற்றச்சாட்டுகள் கூறியிருந்த நிலையில், அது தொடா்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக நிா்வாகம் கூறியுள்ளது.


கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் மீது ஆராய்ச்சி மாணவா் குற்றச்சாட்டுகள் கூறியிருந்த நிலையில், அது தொடா்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக நிா்வாகம் கூறியுள்ளது.
பாரதியாா் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது, முனைவா் பட்டம் பெற்ற பிரகாஷ் என்பவா் ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் ஒரு கடிதத்தை வழங்கினாா். அதில், பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவா்களிடம் வழிகாட்டி பேராசிரியா்கள் நகை, பணம் பெறுவதாகவும், ஜாதி ரீதியாக பாகுபாடு பாா்ப்பதாகவும், விடுதிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
இதைத் தொடா்ந்து உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், பாரதியாா் பல்கலைக்கழக விடுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி, மாணவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், மாணவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படியும் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், பல்கலைக்கழக விடுதிகளில் உள்ள குறைகள் உடனடியாக நிவா்த்தி செய்யப்படும் என்று பதிவாளா் (பொறுப்பு) ரூபா குணசீலன் தெரிவித்துள்ளாா். மேலும், மாணவா்களின் மற்ற குற்றச்சாட்டுகள் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...