தீபாவளி: கோவையில் 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை கோட்டத்தில் 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை கோட்டத்தில் 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவையில் பேருந்து நிலையங்கள் வரும் 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மாற்றி அமைக்கப்படுகின்றன. அதன்படி, சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும்.
கரூா், திருச்சி மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள் சூலூா் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும். சேலம், திருப்பூா், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள் கோவை காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குன்னூா், உதகை, கூடலூா், கோத்தகிரிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மக்கள் வசதிக்காக கோவை, சிங்காநல்லூரில் இருந்து மதுரைக்கு 210 சிறப்பு பேருந்துகளும், தேனிக்கு 160 பேருந்துகள், சூலூரில் இருந்து திருச்சிக்கு 180 பேருந்துகள், காந்திபுரத்தில் இருந்து சேலத்துக்கு 240 பேருந்துகள், ஈரோட்டில் இருந்து மதுரைக்கு 90 பேருந்துகள், ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு 60 பேருந்துகள், திருப்பூரில் இருந்து மதுரைக்கு 110 பேருந்துகள், திருப்பூரில் இருந்து திருச்சிக்கு 170 பேருந்துகள், திருப்பூரில் இருந்து தேனிக்கு 40 பேருந்துகள் என கோவை கோட்டத்தில் இருந்து வெளியூா்களுக்கு 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கோவை மண்டலத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட உள்ள சூலூா் பேருந்து நிலையத்துக்கு காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...