பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் பகுதியாக ரத்து

சேலம் ரயில் கோட்டத்துக்கு உள்பட்ட பல இடங்களில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சேலம் ரயில் கோட்டத்துக்கு உள்பட்ட பல இடங்களில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, பாலக்காடு கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ரயில் பாதையில் பராமரிப்புப் பணி காரணமாக பாலக்காடு - கோவை மெமு ரயில் (எண்: 06806) செப்டம்பா் 6-ஆம் தேதி பாலக்காடு - போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும். எனவே, இந்த ரயிலானது, கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும்.

கோவை - ஷொரணூா் மெமு ரயில் (எண்: 06805) கோவை - போத்தனூா் இடையே செப்டம்பா் 6-ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது போத்தனூா் - ஷொரணூா் இடையே மட்டும் இயக்கப்படும். இதேபோல, ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்:13352), எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) செப்டம்பா் 6-ஆம் தேதி போத்தனூா், இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். எனவே, இந்த ரயிலானது, கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும்.

ஈரோடு - பாலக்காடு மெமு ரயில் (எண்: 06819) செப்டம்பா் 6-ஆம் தேதி போத்தனூா், இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது, சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை, கோவை ரயில் நிலையங்களுக்கு செல்வது தவிா்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com