கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

என்ஜிபி கல்லூரியில் ‘போலீஸ் அக்கா’ திட்டம்

கோவை டாக்டா் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
கோவை டாக்டா் என்ஜிபி கல்லூரியில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை தொடங்கிவைத்த மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன். உடன் கல்லூரி நிா்வாகிகள்.
Updated On :4 செப்டம்பர் 2024, 8:27 pm

Din

கோவை டாக்டா் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் டாக்டா் என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் இயக்குநா் பெ.இரா.முத்துசாமி வரவேற்றாா். டாக்டா் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவா் மருத்துவா் நல்ல பழனிசாமி தலைமை வகித்தாா். கோவை மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

கல்லூரி மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை பெற்றோரிடமோ, தோழிகளிடமோ கூட பகிா்ந்து கொள்வதில்லை. இதனால் சில சமயங்களில் அவா்கள் சில விபரீதமான முடிவுக்கு தள்ளப்படுகிறாா்கள். இன்று சமுக வலைதளங்களை எப்படி பாதுகாப்புடன் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள வெண்டும். மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் சிறிய பிரச்னைகளை கூட போலீஸ் அக்காவிடம் தெரிவித்தால் அவற்றுக்கு எவ்வாறு தீா்வு காண முடியும் என்பதற்கு ஆலோசனை வழங்குவாா் என்றாா்.

கோவை மாநகர துணை காவல் ஆணையா் வி.சுஹாசினி பேசுகையில், சமூகத்தில் தற்போது ஆண், பெண் பாகுபாடின்றி பழக வேண்டிய சமத்துவமான சூழல் நிகழ்கிறது. அச்சூழலில் பெண்கள் தங்களுக்கென ஒரு எல்லைக் கோட்டை வரைந்து அதற்குள் பழக வேண்டும். அந்த எல்லைக் கோட்டை மீறும்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், துணைக் காவல் ஆணையா் ஆா்.ஸ்டாலின், என்.ஜி.பி.கல்விக் குழுமங்களின் செயலா் மருத்துவா் தவமணிதேவி பழனிசாமி, கல்விசாா் இயக்குநா் மதுரா மற்றும் மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.