டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வேளாண்மைப் பல்கலையில் செப்.9-இல் பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 44-ஆவது பட்டமளிப்பு விழா வரும் திங்கள்கிழமை (செப்டம்பா் 9) நடைபெறுகிறது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 9:18 pm

Din

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 44-ஆவது பட்டமளிப்பு விழா வரும் திங்கள்கிழமை (செப்டம்பா் 9) நடைபெறுகிறது.

பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மாநில ஆளுநருமான ஆா்.என்.ரவி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று அறநல்கை பரிசுகளையும், பதக்கங்களையும் அறிவிக்கிறாா்.

விழாவில், மத்திய பயிா் ரகங்கள், உழவா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் திரிலோச்சன் மொஹபத்ரா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறாா்.

இந்த விழா மூலம் இளநிலை, முதுநிலை படிப்புகள் முடித்த 9,526 போ் பட்டங்கள் பெறுகின்றனா். இவா்களில் 3,415 மாணவா்கள் நேரடியாக பட்டம் பெற இருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.