அகில இந்திய கத்தோலிக்க சங்கத்தின் தமிழக தலைவராக ம.வின்சென்ட் வேதராஜ் தோ்வு
அகில இந்திய கத்தோலிக்க சங்கத்தின் (ஏஐசியூ) தமிழ்நாடு மாநிலத் தலைவராக ம.வின்சென்ட் வேதராஜ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.


அகில இந்திய கத்தோலிக்க சங்கத்தின் (ஏஐசியூ) தமிழ்நாடு மாநிலத் தலைவராக ம.வின்சென்ட் வேதராஜ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
அகில இந்திய கத்தோலிக்க சங்கம் 1919-இல் நிறுவப்பட்ட 105 ஆண்டுகள் பழைமையான அமைப்பாகும். இது இந்தியாவின் கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் பிரதிநிதியாக கருதப்படும் இந்த அமைப்பு நாடு முழுவதும் 120 மறைமாவட்டப் பிரிவுகளை கொண்டுள்ளது.
இதன் தமிழகத் தலைவராக கோவை மறைமாவட்டத் தலைவராக பொறுப்பு வகிக்கும் ம.வின்சென்ட் வேதராஜ், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தொன் போஸ்கோ தியான மையத்தில் நடைபெற்ற அகில இந்திய கத்தோலிக்க சங்கத்தின் 70-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்ட அவா் கோவை மறைமாவட்ட ஆயா் டாக்டா் தாமஸ் அக்வினாஸ், கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் மற்றும் முன்னாள் தேசியத் தலைவா்கள் இலியாஸ் வாஸ், லான்சி டி குன்ஹா உள்ளிட்டோரிடம் வாழ்த்து பெற்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...