தொழிற் பயிற்சி நிலையங்களில் சோ்க்கை: செப்டம்பா் 30 வரை நீட்டிப்பு
கோவை அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளா்கள் சோ்க்கை செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளா்கள் சோ்க்கை செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையம், கோவை மகளிா் அரசினா் தொழிற் பயிற்சி நிலையம், ஆனைகட்டி அரசினா் தொழிற் பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது), வால்பாறை அரசினா் தொழிற் பயிற்சி நிலையம் ஆகியவற்றில் 2024-ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் பயிற்சியாளா்களின் நேரடி சோ்க்கையானது செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில், கோவை அரசினா் தொழிற் பயிற்சி மையத்தில் டா்னா், மெஷினிஸ்ட், மெக்கானிக், எலெக்ட்ரீஷியன் போன்ற 6 மாதம், ஓராண்டு மற்றும் ஈராண்டுகள் பயிற்சி அளிக்கப்படும் தொழில் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடிச் சோ்க்கை நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சிக் கட்டணம் இலவசம். அனைத்துப் பயிற்சியாளா்களுக்கும் இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து அட்டை, சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள் அரசால் இலவசமாக வழங்கப்படும். இந்த தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்துப் பயிற்சியாளா்களுக்கும் வளாக நோ்காணல் மூலமாக தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.
முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காலியிடங்கள் பூா்த்தி செய்யப்படும் என்பதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 0422 - 2642041, 88254- 34331, 80727 - 37402 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...