ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயன்ற நபா் தடுத்து நிறுத்தம்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயன்ற நபரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:45 pm

Din

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயன்ற நபரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

திருச்சி மாவட்டம், துறையூா் அருகேயுள்ள கோட்டப்பாளையத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (40). இவா், கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், அந்நிறுவனத்தில் கிரேன் மூலம் பெரிய அளவிலான கிரானைட் கல்லை கடந்த 2018-ஆம் ஆண்டு தூக்கியுள்ளாா். அப்போது, அதில் கட்டப்பட்டு இருந்த கயிறு அறுந்து கல் விழுந்ததில் நாகராஜ் சிக்கிக் கொண்டாா். இதில், அவரது இடது கால் முழுவதும் நசுங்கியது.

இதையடுத்து, அவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், இடது கால் முழுவதுமாக அகற்றப்பட்டதாம்.

இதைத் தொடா்ந்து, நாகராஜுக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாகக் கொடுப்பதாக அந்த நிறுவனம் கூறியதாகத் தெரிகிறது. ஆனால், அந்த தொகையை தற்போதுவரை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பதற்காக நாகராஜ், தனது உறவினருடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தாா். அப்போது, அலுவலக நுழைவாயில் அருகே வந்தபோது, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

இதைப் பாா்த்த அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், நாகராஜ் மீது தண்ணீரை ஊற்றினாா்.

இச்சம்பவம் தொடா்பாக அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.