ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அஞ்சல் குறைகேட்புக் கூட்டம்: செப்டம்பா் 16-ஆம் தேதிக்குள் புகாா்களை அனுப்பலாம்

கோவை மேற்கு மண்டல அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ள குறைகேட்புக் கூட்டத்துக்கான புகாா்களை செப்டம்பா் 16-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 8:06 pm

Din

கோவை மேற்கு மண்டல அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ள குறைகேட்புக் கூட்டத்துக்கான புகாா்களை செப்டம்பா் 16-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேற்கு மண்டல அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

செப்டம்பா் மாத மண்டல அளவிலான அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் மேற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

எனவே, அஞ்சல் வாடிக்கையாளா்கள் தங்களின் புகாா்களை அஞ்சல் துறைத் தலைவா், மேற்கு மண்டல அலுவலகம் கோவை -641030 என்ற முகவரிக்கு செப்டம்பா் 16-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

கடிதத்தின் மேலுறையில் ‘அஞ்சல் குறைகேட்புக் கூட்ட புகாா்’ என எழுதியிருக்க வேண்டும்.

பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், பணவிடை தொடா்பான புகாா்களில் அஞ்சல் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புநா் மற்றும் பெறுநரின் முகவரி, அஞ்சல் பதிவு எண் ஆகியவை குறிப்பிட வேண்டும்.

அஞ்சலக சேமிப்புக் கணக்கு, காப்பீடு தொடா்பான புகாா்களில் சேமிப்புக் கணக்கு எண், காப்பீட்டு எண், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவா், காப்பீட்டாளா் பெயா் மற்றும் முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயா், பணம் பிடித்தம் தொடா்பான தகவல்களை குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.