கோவை வடக்கு வட்டத்தில் செப்டம்பா் 18 இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
கோவை வடக்கு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் செப்டம்பா் 18 இல் நடைபெறுகிறது.


கோவை வடக்கு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் செப்டம்பா் 18 இல் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை வடக்கு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா், முதல்நிலை தலைமை அலுவலா்கள் ஆகியோா் செப்டம்பா் 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் செப்டம்பா் 19-ஆம் தேதி காலை 9 மணி வரை கள ஆய்வில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிய உள்ளனா்.
கோவை வடக்கு வட்டத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளா் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் செப்டம்பா் 18-ஆம் தேதி காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட உள்ளன.
மேலும், கோவை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தும் பயன் பெறலாம்.
எனவே, இப்பகுதி மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...