போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொச்சுவேலி இடையே ஒரு வழிச் சிறப்பு ரயில்
சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு ஒரு வழிச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு ஒரு வழிச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 13) பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூா் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்:06160) மறுநாள் காலை 8.30 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூா், மாவேலிக்கரை, காயன்குளம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...