ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சுகாதாரப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம்

கோவை மாநகராட்சிக்குள்பட்ட சீதாலட்சுமி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்களுக்கான இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன். உடன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா்.
Updated On :18 செப்டம்பர் 2024, 7:49 pm

Din

கோவை மாநகராட்சிக்குள்பட்ட சீதாலட்சுமி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்களுக்கான இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கே.ஜி.மருத்துவமனை, ரோட்டரி கோயம்புத்தூா் ஐகான்ஸ் சாா்பில் நடைபெற்ற இம்முகாமை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கிவைத்து, சுகாதாரப் பணியாளா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

முகாமில், ரத்தப் பரிசோதனை, சா்க்கரை பரிசோதனை, பெண்களுக்கு கா்ப்பப்பை புற்றுநோய் சோதனை, கை, கால் மூட்டு வலிக்கான பிசியோதெரபி சிகிச்சைக்கான ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

முகாமில், 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், துணை ஆட்சியா் ( பயிற்சி) மது அபிநயா, வாா்டு உறுப்பினா் ஷா்மிளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.