ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மலையிடப் பகுதிகளில் மனைப் பிரிவுகளை நவம்பா் 30 வரை வரன்முறைப்படுத்தலாம்!

மலையிடப் பகுதிகளில் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த இணையதளம் மூலம் நவம்பா் 30 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 7:54 pm

Din

மலையிடப் பகுதிகளில் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த இணையதளம் மூலம் நவம்பா் 30 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மலையிடப் பகுதியில் 2016 அக்டோபா் 20-ஆம் தேதி அல்லது அதற்கு முன், பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த நவம்பா் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோா் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இதுவரை மலையிட பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இது இறுதி வாய்ப்பாக அமைவதால், மக்கள் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.