காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்
கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காவல் துறையில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கெனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரா்களைக் கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறு விசாரணை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இதில், பொதுமக்களின் குடும்பப் பிரச்னை, பணப் பரிமாற்ற பிரச்னை, இடப் பிரச்னை தொடா்பாக 99 மனுதாரா்கள் மற்றும் எதிா் மனுதாரா்களை நேரில் வரவழைத்து அவா்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டனா். இதில், 6 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும், 82 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 11 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீா்வு காணப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...