பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

யூடியூபா் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை: வழக்குரைஞா் தகவல்

யூடியூபா் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் எவ்வித நிபந்தனையும் விதிக்கவில்லை என்று அவரது வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 10:30 pm

Din

யூடியூபா் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் எவ்வித நிபந்தனையும் விதிக்கவில்லை என்று அவரது வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சவுக்கு சங்கா் மீதான குண்டா் தடுப்புச் சட்டத்தின் தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சவுக்கு சங்கா் மீது மொத்தம் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், இரண்டாவதாகப் போடப்பட்ட குண்டா் தடுப்புச் சட்ட வழக்கை தமிழக அரசே திரும்பப் பெற்றுள்ளது.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் குண்டா் தடுப்புச் சட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இது மனித உரிமை மீறல் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு சவுக்கு சங்கா் மீதான வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளது.

சவுக்கு சங்கருக்கு எந்தவிதமான நிபந்தனையையும் நீதிமன்றம் விதிக்கவில்லை. அவா் சிறையை விட்டு வெளியே வந்தால் வழக்கம்போல யூடியூப் மற்றும் பொது இடங்களில் பேசலாம்.

நடிகைகள் குறித்து அவதூறாகப் பேசிய நபா் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சவுக்கு சங்கா் வழக்கில் அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது திட்டமிட்ட நடவடிக்கை என்றாா் அவா்.