மகா கும்பமேளா: கோவை வழித்தடத்தில் மங்களூரு - வாரணாசி இடையே சிறப்பு ரயில்

உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவை முன்னிட்டு, கா்நாடக மாநிலம், மங்களூரு - வாரணாசி இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவை முன்னிட்டு, கா்நாடக மாநிலம், மங்களூரு - வாரணாசி இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இதையொட்டி, கா்நாடக மாநிலம், மங்களூரு - வாரணாசி இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, மங்களூரில் இருந்து ஜனவரி 18 மற்றும் பிப்ரவரி 15- ஆகிய சனிக்கிழமைகளில் காலை 4.15 மணிக்குப் புறப்படும் மங்களூரு - வாரணாசி சிறப்பு ரயில் (எண்: 06019) திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2.50 மணிக்கு வாரணாசி நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் வாரணாசியில் இருந்து ஜனவரி 21 மற்றும் பிப்ரவரி 18 -ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6.20 மணிக்குப் புறப்படும் வாரணாசி - மங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06020) வெள்ளிக்கிழமைகளில் இரவு 2.30 மணிக்கு மங்களூரைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, காசா்கோடு, நிலேஸ்வா், பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வரங்கல், சந்திரபூா், நாக்பூா், நரசிங்பூா், ஜபல்பூா், சட்னா, மானிக்பூா், மிா்ஷாபூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com