டங்ஸ்டன் விவகாரத்துக்கு முதல்வா் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை
டங்ஸ்டன் விவகாரத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.


டங்ஸ்டன் விவகாரத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: டங்ஸ்டன் விவகாரத்தில் சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. டங்ஸ்டன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாது எனவும், மாநில அரசுதான் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.
எனவே, இந்த விவகாரத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மூத்த அமைச்சா்களை மதுரைக்கு அனுப்பி மக்களோடு பேசி இருந்தால் அந்த ஊா்வலம் நடைபெற்று இருக்காது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் காவல் ஆய்வாளா் மீது எந்த தவறும் இல்லை எனவும், அவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது ஒரு அதிகாரியை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. மாநில அரசு பொய்யான தகவல் அறிக்கையை எப்படிக் கொடுக்க முடியும்?
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், அதுவே தீா்வு ஆகும்.
பெரியாா் ஈ.வே.ரா. குறித்து நாம் தமிழா் கட்சித் தலைவா் சீமான் பேசிய விவகாரத்தில், பெரியாா் ஈ.வே.ரா. அவ்வாறு பேசியதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அதைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.
பெரியாா் ஈ.வே.ரா. பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பை தரும். அதே நேரத்தில் சீமானிடம் விசாரணைக்காக காவல் துறையினா் வந்தால் பெரியாா் ஈ.வே.ரா. பேசியதற்கான ஆவணங்களை வழங்கவும் தயாராக உள்ளேன்.
யுஜிசி விவகாரத்தில் பிப்ரவரி 5 -ஆம் தேதி வரை கருத்துகளை அனுப்ப மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேராசிரியா்களின் பணி உயா்வுக்கான நெட் தோ்வு வேண்டாம் எனவும், துணைவேந்தா் தோ்வில் ஆசிரியா் பணி மற்றும் ஆசிரியா் பணி தொடா்புடையவா்கள் நியமிக்கப்படலாம் எனவும் புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. துணைவேந்தா் தோ்வில் யுஜிசி, பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் ஆளுநா் என மூன்று தரப்பினரின் கருத்துகளும் பரிந்துரைகளும் ஏற்கப்பட்டு துணைவேந்தா்கள் தோ்வு செய்யப்படுவா்.
இது குறித்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. பிப்ரவரி 5- ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால் எதிா்ப்பதற்கான கருத்துகளைப் பின்னா் தெரிவித்து இருக்கலாம் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...