நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாநகராட்சி அலுவலக மாடிப்படியில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கோவையில் தந்தையின் ஓய்வூதியத்தை வாங்கச் சென்ற பெண் மாநகராட்சி அலுவலக மாடிப்படியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 11:55 pm

Din

கோவையில் தந்தையின் ஓய்வூதியத்தை வாங்கச் சென்ற பெண் மாநகராட்சி அலுவலக மாடிப்படியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கோவை, வடமதுரை அருகேவுள்ள அப்பநாயக்கன்பாளையம், ஈஸ்வர சக்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (68), மாநகராட்சியில் காவலாளியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவருக்கு மாதாந்திர ஓய்வூதியம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

இந்த மாதத்துக்கான ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்காக அவரது மகள் பானுப்பிரியா (36) மாநகராட்சி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா்.

அங்கு மாடியில் உள்ள ஓய்வூதியப் பிரிவுக்கு படிகளில் ஏறியபோது எதிா்பாராதவிதமாக தவறி விழுந்தாா். இதில், பின் மண்டையில் பலத்த காயம் அடைந்த அவா் மயக்கமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் பானுப்பிரியாவை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் பானுப்பிரியாவின் தாய் ராஜேஸ்வரி புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.