கோவை: யானை தாக்கியதில் முதியவர் பலி!
கோவை புறநகரில் யானை தாக்கி முதியவர் பலியானது பற்றி...


கோவை: கோவை புறநகர்ப் பகுதியில் நடைபயிற்சி சென்ற முதியவரை யானை தாக்கியதில் வியாழக்கிழமை காலை பலியானார்.
கோவை புறநகர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த வனத் துறையினரும் குழுக்கள் அமைத்து ஊருக்குள் வராமல் விரட்டி வருகின்றனர்.
ஆனால், தொடர்ந்து ஊருக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகள் உணவு தேடி ஆக்ரோஷமாக சுற்றி தெரிகிறது. இதனை தடுக்கும் மக்கள் மற்றும் விவசாயிகளை தாக்கி உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு பெரியநாயக்கன் பாளையம் பழைய புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலுமணி என்பவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில், தடாகத்தில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் உள்ள தாளியூர் கிராமத்தில் இன்று காலை நடைபயிற்சிக்குச் சென்ற நடராஜ் என்பவரை அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை தாக்கியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே நடராஜ் உயிரிழந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் தடாகம் காவல் துறையினர் மற்றும் கோவை சரக வனத் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது அங்கு கூடிய மக்கள் உயிரிழந்தவரின் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், ஒற்றைக் காட்டு யானைகளால் உயிரிழப்புகள் தொடர்வதால், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டுவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, போராடும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...