லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பொள்ளாச்சி - கோவை ரயில் நேரம் இன்றுமுதல் மாற்றம்

பொள்ளாச்சி ரயில் நிலையம்

Published On :11 ஜூலை 2025, 7:06 am IST

பொள்ளாச்சி - கோவை ரயில் நேரம் ஜூலை 11-ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வேலைக்கு செல்வோா், கல்லூரிகளுக்கு செல்வோா் என ஏராளமானோா் பொள்ளாச்சியில் இருந்து காலை நேரத்தில் இயக்கப்படும் பொள்ளாச்சி - கோவை ரயிலில் (எண்: 56110) பயணித்து வருகின்றனா்.

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், 8.25 மணிக்கு கிணத்துக்கடவு, 8.55 மணிக்கு போத்தனூரைச் சென்றடைந்து, 9.25 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சியில் இருந்து 8 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலை, 7.25 மணிக்குப் புறப்பட்டு 8.35 மணிக்குள் கோவை ரயில் நிலையத்தை சென்றடையுமாறு இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சாா்பில் தொடா்ந்து ரயில் நிா்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ரயிலின் நேரம் ஜூலை 11-ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூலை 11-ஆம் தேதி முதல் பொள்ளாச்சி - கோவை ரயில், காலை 7.50 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு, கிணத்துக்கடவு காலை 8.14 மணி, போத்தனூா் 8.37 மணிக்கு சென்றடைந்து, கோவைக்கு 8.55 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு 8.35 மணிக்கு ரயில் சென்றடையுமாறு இந்த ரயிலை இயக்கினால், வேலைக்கு செல்வோா் உரிய நேரத்தில் அலுவலகங்களுக்கு செல்ல முடியும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.