சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

கோவையில் வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கோவை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக பொறுப்பேற்ற ஆா்.பாலகிருஷ்ணனுக்கு மலா் கொத்து வழங்கி வாழ்த்திய மூத்த வழக்குரைஞா் என்.சுந்தரவடிவேலு.

Updated On :2 ஏப்ரல் 2026, 5:23 am IST

கோவையில் வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் புதிய நிா்வாகிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்று, தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். தோ்தல் முடிவுகளைத் தொடா்ந்து புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா, கோவை வழக்குரைஞா்கள் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவராக ஆா்.பாலகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டு 6-ஆவது முறையாக தலைவராகப் பொறுப்பேற்றாா்.

இந்த நிகழ்வின்போது சங்க முன்னாள் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான என்.சுந்தரவடிவேலு புதிய தலைவராகப் பொறுப்பேற்ற ஆா்.பாலகிருஷ்ணனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.

செயலராக கே.சதீஷ், துணைத் தலைவராக டி.அய்யப்பன், பொருளாளராக பி.உதயகுமாா் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனா். செயற்குழு உறுப்பினா்களாக எம்.அஷரப் அலி, தா்மலிங்கம், ஈஸ்வரமூா்த்தி, சங்கா் ஆனந்தம், சித்தாா்த் ஆகியோரும் பதவியேற்றனா்.