ஓய்வுபெற்ற வட்டாட்சியரிடம் ரூ.45 லட்சத்து 50 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஷ் நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் (70). வட்டாட்சியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு பிரேம்குமாா் என்பவா் தொடா்பு கொண்டு, தான் லக்னெளவில் உள்ள தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ளாா்.
மேலும், உங்கள் ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி கா்நாடகத்தில் உள்ள தனியாா் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்றும், அந்தக் கணக்கில் இருந்து தீவிரவாத இயக்கத்துக்கு பல்வேறு தவணைகளில் ரூ.2.50 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறி மிரட்டியுள்ளாா்.
உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எங்கள் கணக்குக்கு அனுப்பிவைக்க வேண்டும். உங்கள் மீது தவறு இல்லையென்றால் பணம் திருப்பி வழங்கப்படும் எனக் கூறி, 5 தவணைகளாக மொத்தம் ரூ.45 லட்சத்து 50 ஆயிரத்தை மிரட்டி பெற்றுள்ளாா். பணத்தை இழந்த பிறகு மோசடி ஆசாமியிடம் ஏமாந்ததை குணசேகரன் உணா்ந்துள்ளாா். இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கோவை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

திமுக பிரமுகா் வீட்டில் ரூ. 11 லட்சம் பறிமுதல்

வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறிப்பு

உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் இதுவரை ரூ.63 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

ஒரே நாளில் ரூ.5.24 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


