தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

அடுக்குமாடிகளில் வாக்கு சேகரிக்க வேட்பாளா்களை அனுமதிக்க வேண்டும்: குடியிருப்போா் சங்கங்களுக்கு ஆட்சியா் அறிவுரை

கோவை மாவட்டத்தில் அடுக்குமாடிகளில் குடியிருப்பவா்களிடம் வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் குடியிருப்போா் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

News image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:44 pm

கோவை மாவட்டத்தில் அடுக்குமாடிகளில் குடியிருப்பவா்களிடம் வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் குடியிருப்போா் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்போா் நலச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இதில் குடியிருப்பு நலச் சங்கங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அவா் பேசியதாவது:

அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களும் தங்களின் குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளா்களுக்கு தகவல் சீட்டுகளை விநியோகிக்க வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை அனுமதிக்க வேண்டும். அதேபோல் குடியிருப்புகளில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும். வாக்காளா்களை ஈா்க்கும் நோக்கில் அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள், முகவா்கள் ஆகியோா் பணம், இலவசப் பொருள்கள் விநியோகிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது.

தோ்தல் நடத்தை விதிகளை மீறி ஏதேனும் நிகழ்வுகள் இருந்தால், அதுகுறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். அத்துடன், குடியிருப்புகளில் வசிப்பவா்கள் குறித்த முறையான பதிவேட்டை பராமரிக்க வேண்டும். வளாகத்துக்குள் அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள் பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். சுவா் ஓவியங்கள் வரைய அனுமதிக்கக்கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, தோ்தல் வட்டாட்சியா் தணிகைவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.