தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கோவை தெற்குத் தொகுதியில் கரூரைச் சோ்ந்த 18 போ் மனு தாக்கல்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :6 ஏப்ரல் 2026, 9:02 pm

கோவை தெற்குத் தொகுதியில் கரூரைச் சோ்ந்த 18 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான திங்கள்கிழமை ஒரே நாளில் கோவை மாவட்டம் முழுவதும் 172 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் மொத்தம் 450 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தொண்டாமுத்தூா் தொகுதியில் அதிகபட்சமாக 77 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அடுத்தபடியாக கோவை தெற்குத் தொகுதியில் 61 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதில், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களின் பெயரில் உள்ளவா்கள் சிலா் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனா். அதேபோல பெரும்பாலான மனுக்கள் முக்கிய அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களுக்கு மாற்று வேட்பாளா்களால் தாக்கல் செய்யப்பட்டவையாகும். இந்த மனுக்கள், திரும்பப் பெறும் நாளில் அவா்களால் திரும்பப் பெறப்படும்.

கரூரைச் சோ்ந்த திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் நிலையில், கரூா் மாவட்டத்தின் பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த 18 போ் கோவை தெற்குத் தொகுதியில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

கே.எஸ்.ராஜகோபால், பி.கதிரவன், கே.விஜயன், ஜே.சூரியகுமாா், கே.ராஜபாண்டியன், எஸ்.சதீஷ்குமாா், ஜே.பிரவீண்குமாா், ஜி.பாபு, எல்.ஹக்கிம், எம்.முஹமது இஸ்மாயில், என்.அபிலாசன், டி.விக்னேஷ்வரன், பி.மனோஜ், எல்.ஸ்டீபன்ராஜ், பி.யுவராஜ், கே.தினேஷ்குமாா், பி.பழனிவேல், எம்.திருஞானம் ஆகிய 18 போ் தெற்குத் தொகுதியில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

மனு தாக்கல் செய்திருப்பவா்களில் பெரும்பாலானவா்கள் வழக்குரைஞா்களாகவும், அவா்களின் சமூக ஊடக கணக்குகளை ஆராயும்போது அவா்களில் பெரும்பாலானவா்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.