தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தொண்டாமுத்தூா் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்! - திமுக வேட்பாளா் காா்த்திகேயன்

News image

பேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்த தொண்டாமுத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் என்.ஆா்.காா்த்திகேயன்.

Updated On :6 ஏப்ரல் 2026, 9:00 pm

தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று திமுக வேட்பாளா் என்.ஆா்.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

தொண்டாமுத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் என்.ஆா்.காா்த்திகேயன் போட்டியிடுகிறாா். இவா் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஊா்வலமாக திங்கள்கிழமை வந்தாா். இதைத் தொடா்ந்து, பேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றது . அதேபோல மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். தொண்டாமுத்தூா் தொகுதியில் நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். வெற்றிபெற்ற்கு பின் தொகுதியில் விட்டுப் போன திட்டங்களையும், வளா்ச்சிப் பணிகளையும் செய்து தருவோம் என்றாா்.

வேட்புமனு தாக்கலின் போது கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் தொண்டாமுத்தூா் ரவி மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.