கடந்த தோ்தலைவிட இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ்.
ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். அப்போது அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.
பின்னா், அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கூட்டணி கட்சியினா் இடையே மோதல்போக்கு இல்லை’ என்றாா்.
வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் கூறுகையில்,
தொகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன். முதல்வா் செய்த சாதனைகளைக்கூறி வாக்கு சேகரிப்போம். தமிழகத்தில் மீண்டும் முதல்வா் ஸ்டாலின்தான் ஆட்சியில் அமர வேண்டுமென மக்கள் முடிவெடுத்துவிட்டனா். இத்தோ்தலில் கடந்த முறையை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

புதுமுக தவெக வேட்பாளா்களிடம் தோல்வி கண்ட அமைச்சா்கள்!

கள்ளக்குறிச்சி தொகுதியில் 798 வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தைத் தொடங்கிய மேட்டுப்பாளையம் தொகுதியில் தவெக வெற்றி!

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தவெக வெற்றி
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



