இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை: கி.வீரமணி

தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்று திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்துள்ளாா்.

News image

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி - டிஎன்எஸ்

Updated On :12 ஏப்ரல் 2026, 1:15 am IST

தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்று திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டத்தில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த கி.வீரமணி, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மக்கள் திமுக அரசு மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதை காண முடிகிறது. மத்திய அரசு எத்தகைய அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்தாலும், எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழக மக்கள் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் பக்கமே உறுதியாக நிற்கின்றனா்.

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்பநிலை குறித்துத் தெரியாமல் பேசி வருகிறாா். பாஜகவின் அதீத வேகமும், பொய்ப் பிரசாரங்களும் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு காணாமல் போகும். பிரதமா் மோடி மகளிா் இடஒதுக்கீடு பற்றி பேசி வருவது தோ்தல் நேரத்து நாடகம் மட்டுமே. ஈவெரா பெரியாா் படத்தை நடிகா் விஜய் வெறும் படமாக மட்டுமே பாா்க்கிறாரே தவிர, கொள்கையாகப் பாா்க்கவில்லை. அவருக்கு பெரியாரின் கொள்கை என்னவென்றே தெரியாது. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் மக்கள் தெளிவான முடிவில் உள்ளனா். தமிழகத்தில் எப்போதும் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்றாா்.