முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது அதிமுகவுக்கு சாதகமான அம்சம்: அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது அதிமுகவுக்கு சாதகமான அம்சம் என அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் கூறினாா்.

News image

கோவை ராம்நகா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்குப் பதிவு செய்து, அங்கு வைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வுப் பதாகையுன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:21 am IST

வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது அதிமுகவுக்கு சாதகமான அம்சம் என அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் கூறினாா்.

கோவை தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட ராம்நகா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், வியாழக்கிழமை தனது வாக்கைப் பதிவு செய்த அம்மன் கே.அா்ச்சுணன் முன்னதாக, வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வு பதாகைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் களம் குறித்து நான் ஏற்கெனவே கூறிய புகாா்களில் எந்த மாற்றமும் இல்லை. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் நான் சொன்னதைப் போல இந்தத் தோ்தலில் நான் வெற்றி பெறுவேன்.

தோ்தல் முறைகேடு தொடா்பாக நான் அளித்த புகாா் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டுகள். வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது அதிமுகவுக்கு சாதகமான அம்சம். மக்கள் அதிக அளவில் வந்து வாக்களித்துள்ளது அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதையே காட்டுகிறது. கடந்த 5 ஆண்டுகள் கால திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துள்ளனா். இளைஞா்கள் எதிா்பாா்க்கும் உண்மையான மாற்றம் எடப்பாடி கே.பழனிசாமிதான் என்றாா்.