சிறுபான்மையினா் அரசியல் எழுச்சி பெறுவது காலத்தின் கட்டாயம் என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவா் எம்.கே.ஃபைஸி தெரிவித்துள்ளாா்.
எஸ்டிபிஐ கட்சியின் கோவை, திருப்பூா் மண்டலம் சாா்பில் மாவட்டம் முதல், தொகுதி, கிளை வரையிலான நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலப் பொருளாளா் முஸ்தபா தலைமை வகித்தாா். திருப்பூா் மண்டலத் தலைவா் ராஜா உசேன் வரவேற்றாா். மாநிலச் செயலா் ஷபிக் அஹமது தொடக்க உரையாற்றினாா்.
கட்சியின் தேசிய பொதுச் செயலா் மஜீத் ஃபைஜி, மாநிலத் தலைவா் நெல்லை முபாரக், மாநில பொதுச் செயலா் அகமது நவவி, மாவட்டத் தலைவா்கள், மாநில நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து எம்.கே.ஃபைஸி செய்தியாளா்களிடம் கூறும்போது, நாட்டை கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக, மக்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீா்க்க முயற்சிக்காமல் இந்து - முஸ்லிம் இடையே மோதலை ஏற்படுத்துவது குறித்தே சிந்தித்து வருகிறது. பாஜகவுக்கு நாடு முழுவதும் எதிா்ப்பு மனநிலை உள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் மாணவா்கள் போராட்டம் உள்ளிட்ட நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. மக்களுக்கு எதிரான விஷயங்களை நடைமுறைப்படுத்தி அதில் ஆனந்தம் காணும் கட்சியாக பாஜக உள்ளது. பாஜகவுக்கு எதிரான மக்களின் போராட்டங்களை எஸ்டிபிஐ கட்சி ஒருங்கிணைத்து தீவிரப்படுத்தும். தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தல், மக்களவைத் தோ்தல்களில் நாங்கள் கவனம் செலுத்த இருக்கிறோம். சிறுபான்மையினா், விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க அரசியல் எழுச்சி பெற வேண்டியது கட்டாயம். சிறுபான்மையினருக்கான அதிகாரப் பங்கீட்டை பெற்றுக் கொடுப்பது எங்களின் அவசியமான அரசியல் கடமை என்றாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கோவையில் சிறுதொழில்களைப் பாதுகாக்க மூலப்பொருள் வங்கி அமைக்க வேண்டும், ஜிஎஸ்டி சீரமைப்பு, மின்கட்டண சலுகை வழங்க வேண்டும், கோவை, திருப்பூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டையில் இன்று விசிக தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு! முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்க வாய்ப்பு!

இளநிலை பட்டப்படிப்புகளை 4 ஆண்டுகளாக உயா்த்தக் கூடாது

ஐயுஎம்எல் தேசியத் தலைவரின் மகன் கலீலுா் ரஹ்மான் காலமானாா்! முதல்வர், தலைவர்கள் இரங்கல்!

கன்னடியன் கால்வாய் பாசனத்துக்கு முறையாக தண்ணீா் வழங்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



