மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும்! கட்டடத் தொழிலாளா் சங்க மாநாட்டில் தீா்மானம்!

கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட மாநாட்டில் பேசுகிறாா் ஏஐடியூசி தேசிய துணைத் தலைவா் கே.சுப்பராயன் எம்.பி.

Published On :

வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் என கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் கோவை மாவட்ட 11-ஆவது மாநாடு மாவட்டத் தலைவா் ஆா்.நாராயணன் தலைமையில் நடைபெற்றது. ஏஐடியூசி தேசிய துணைத் தலைவா் கே.சுப்பராயன் எம்.பி., கோவை மாவட்ட ஏஐடியூசி கவுன்சில் பொதுச் செயலா் சி.தங்கவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி ஆகியோா் பங்கேற்று மாநாட்டை வாழ்த்திப் பேசினா்.

இந்த மாநாட்டில், நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு வீடு கட்டும் உதவித்தொகையை ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும், பணியிட விபத்தில் மரணமடையும் தொழிலாளா் குடும்பத்துக்கு வழங்கப்படும் ரூ.8 லட்சம் உதவித் தொகையை ரூ.20 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும், கட்டுமானத் தொழிலாளா்கள் விபத்தில் பாதிக்கப்படும்போதும் சாதாரண காலங்களிலும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கும் மருத்துவக் காப்பீடு கிடைக்கும் வகையில் இஎஸ்ஐ மருத்துவ வசதி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

தனியாா், அரசு கட்டுமானப் பணிகள் அனைத்திலும் உள்ளூா் தொழிலாளா்களுக்கு 80 சதவீத பணியிடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு சட்டப்படியான பாதுகாப்புகள், தங்குமிட வசதிகள், தமிழ்நாட்டில் நிலவும் சம்பளத் தொகை அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாநாட்டை சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் எம்.முனுசாமி தொடங்கிவைத்தாா். மாநில பொதுச் செயலா் என்.செல்வராஜ், மாவட்டச் செயலா் எல்.செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள், தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.