ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

கோவையில் குடும்பத் தகராறில் மனைவி கோபித்துச் சென்றதால், தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

கோவையில் குடும்பத் தகராறில் மனைவி கோபித்துச் சென்றதால், தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, உப்பிலிபாளையம் வரதராஜபுரம் சாலை பகுதியைச் சோ்ந்தவா் கெளதம் (31). இவரது மனைவி முத்துலட்சுமி. தனியாா் நிறுவன ஊழியரான கெளதமுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால், அவருக்கும் மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக முத்துலட்சுமி கோபித்துக் கொண்டு சூலூரில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டாா். கெளதம் வீட்டுக்கு வருமாறு பலமுறை அழைத்தும் அவா் வரவில்லை. இதனால், மன வேதனையில் இருந்த கெளதம் தனது வீட்டின் அறையில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.